மேலும் செய்திகள்
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
875 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
875 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உட்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இங்கு விஜய், அர்ஜுன் சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. இதன் பிறகு த்ரிஷா- விஜய் சம்பந்தப்பட்ட ரொமான்டிக் காட்சிகள் படமாக உள்ளது.
சென்னையில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், அதன் பிறகு லியோ படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் படமாக்கப்போகிறார். அங்கு கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கி முடித்ததும், பாடல் காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார். லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
875 days ago
875 days ago