உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்த படத்தின் பணிகளை தொடங்கிய பார்த்திபன்

அடுத்த படத்தின் பணிகளை தொடங்கிய பார்த்திபன்

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ஒத்த செருப்பு, இரவின் நிழல் என்ற இரண்டு சாதனை படங்களை இயக்கினார். ஒத்த செருப்பு படத்தில் அவர் மட்டுமே நடித்தார். இரவின் நிழல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீயர் படம். இரண்டு படங்களும் அவருக்கு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது. என்றாலும் இந்த இரண்டு படங்களும் அவருக்கு பொருளாதார ரீதியில் பெரிதாக கை கொடுக்கவில்லை. இதனால் அடுத்து ஒரு பக்கா கமர்ஷியில் படம் எடுக்க போகிறார்.

தற்போது அதற்கான பணிகளை தொடங்கி உள்ளார். மோட்டார் பைக்கில் அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டுள்ள பார்த்திபன், புதிய படத்திற்கான லொக்கேஷன் பார்க்க வந்திருப்பதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

பார்த்திபனின் புதிய படத்தில் அவருடன் மற்றுமொரு முன்னணி நடிகர் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !