ஒரே நாளில் மோதும் விஜய் சேதுபதி - விஜய் ஆண்டனி படங்கள்!
ADDED : 888 days ago
விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மோகன்ராஜா, மகிழ்திருமேனி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். வெங்கட கிருஷ்ணா என்பவர் இயக்கி உள்ள இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாராகி விட்டபோதும், சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த படத்தை வருகிற மே 19ஆம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விஜய் ஆண்டனி தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் பிச்சைக்காரன்- 2 படமும் இதே மே மாதம் 19 ஆம் தேதி தான் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.