மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
873 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
873 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
873 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
873 days ago
விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷன். இந்த ஒரே படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்து விட்ட கவுரி கிஷன், அதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் ஒரு சில படங்களில் நடித்துவிட்டார். தற்போது மலையாளத்தில் லிட்டில் மிஸ் ராவுத்தர் என்கிற படத்தில் நடித்துள்ளார் கவுரி கிஷன். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் கேரளாவில் இரவு 11 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் டூவீலரில் வந்த நடிகை கவுரி கிஷனை சோதனைக்காக நிறுத்தியுள்ளனர், கவுரி கிஷனின் பின்னால் லிட்டில் மிஸ் ராவுத்தர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் ஷேர்ஷா ஷெரிப் என்பவர் அமர்ந்திருந்தார். முகத்தில் மாஸ்க் அணிந்திருந்த கவுரி கிஷனிடம் போலீசார் அவரது மாஸ்க்கை அகற்றும்படி கூறியதுடன் அவரது இருசக்கர வாகனத்தின் ஆர்சி புத்தகத்தை பரிசோதித்து விட்டு அது காலாவதியாகிவிட்டதாக கூறி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து வாகனத்தின் ஆர்சி புத்தகம் புதுப்பிக்கும் விஷயம் பற்றியே தனக்கு நினைவு இல்லை என்றும், நள்ளிரவு நேரத்தில் இப்படி ஒரு ஆணுடன் இரு சக்கர வாகனத்தில் ஒரு பெண் வருவதாலேயே சோதனை செய்கிறேன் என்ற பெயரில் இப்படி கடுமையாக பேசுகிறீர்களே.. நான் ஒன்றும் சின்ன பெண் அல்ல.. எனக்கும் 23 வயது ஆகிவிட்டது.. இதுபோன்று வேறு எந்த ஒரு பெண்ணுக்கும் நேர்ந்து விடக்கூடாது என வேண்டிக்கொள்கிறேன்” என்றும் கூறி அவர்களுடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதேசமயம் இந்த வீடியோவை தற்போது கவுரி கிஷன் நடித்து வரும் லிட்டில் மிஸ் ராவுத்தர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருப்பதால், ஒருவேளை இது அந்த படத்திற்கான புரமோஷனின் ஒரு பகுதியாக கூட இருக்கலாம் என்றும் சிலர் கமெண்ட்டுகளில் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
873 days ago
873 days ago
873 days ago
873 days ago