கடலூரில் தனுஷ் பட படப்பிடிப்பு
ADDED : 921 days ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பிரீயட் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் கடலூரில் துவங்கியது. இதில் தனுஷ் சமந்தபட்ட காட்சிகள் படமாக்கபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.