ஜஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
ADDED : 871 days ago
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் 'பர்ஹானா'. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரமாக நடித்துள்ள இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கீடைத்தன. அதேசமயம் இந்த படத்திற்கு தற்போது ஒருதரப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில ஊர்களில் படப்பிடிப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு எல்லாம் போடப்பட்ட நிகழ்வுகளும் சில ஊர்களில் நிகழ்ந்தன. இந்நிலையில் இந்த பட விவகாரத்தால் இப்போது சென்னை, தி.நகரில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.