உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் நடிகை அபிராமி

குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் நடிகை அபிராமி

வானவில், விருமாண்டி போன்ற பல படங்களில் நடித்தவர் அபிராமி. இடையில் சிலகாலம் சினிமாவை விட்டு விலகியவர் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். ராகுல் என்பவரை இவர் திருமணம் செய்த நிலையில் பெண் குழந்தை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதுபற்றிய தகவலை அன்னையர் தினமான இன்று அறிவித்துள்ளார்.

மகள் மற்றும் கணவருடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து அபிராமி வெளியிட்ட, ‛‛நானும் ராகுலும் கடந்தாண்டு கல்கி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தோம். அப்போது முதல் எங்கள் வாழ்க்கை அழகாக மாறியது. இன்று(மே 14) அன்னையர் தினத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவராக நான் கருதுகிறேன். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்,'' என குறிப்பிட்டுள்ளார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !