சென்னை வந்ததும் ‛ஜெயிலர்' டப்பிங்கை துவங்கும் ரஜினி
ADDED : 882 days ago
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வந்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு பேட்ச் ஒர்க் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது. இப்படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மும்பையில் நடைபெறும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் ரஜினி.
அதையடுத்து அவர் சென்னை திரும்பியதும் ஜெயிலர் படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை தொடங்குகிறார். அந்த வகையில் ஜூன் 1ம் தேதி முதல் ஜெயிலர் படத்தின் டப்பிங்கை அவர் தொடங்குவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த பணிகளை முடித்ததும் அடுத்தபடியாக ஜெய்பீம் ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார்.