தீபாவளிக்கு ‛ஜிகர்தண்டா 2' ரிலீஸ்
ADDED : 882 days ago
கார்த்திக் சுப்பராஜிற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தந்த படம் ‛ஜிகர்தண்டா'. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடித்தனர். இந்த படத்திற்காக துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் பாபி சிம்ஹா. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ‛ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற பெயரில் இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். நாயகனாக ராகவா லாரன்ஸூம், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆக் ஷன் கலந்த டார்க் காமெடி படமாக உருவாகிறது. படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வரும் நிலையில் தீபாவளிக்கு படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.