உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தில் ராஜுவின் ஹிந்தி படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா

தில் ராஜுவின் ஹிந்தி படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா கடந்த வருடம் பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்தார். அமிதாப்பச்சனுடன் அவர் நடித்த குட்பை மற்றும் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த மிஷன் மஞ்சு என இரண்டு படங்கள் வெளியானாலும் அவை மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் என்கிற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹிந்தியில் ஒரு பெரிய படத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

ஹிந்தியில் பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளனர். இந்த படத்தில் தான் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஹிந்தியில் ஏக்தா கபூர் தயாரித்த குட்பை மற்றும் தெலுங்கில் தில் ராஜு தயாரித்த வாராசுடு ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்திருப்பதால் இந்த இருவருமே தங்களது படத்திற்கு ராஷ்மிகா பொருத்தமான நபர் என முடிவு செய்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !