உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2023 தீபாவளி போட்டியில் இணைந்த இரண்டாவது படம் 'ஜிகர்தண்டா XX'

2023 தீபாவளி போட்டியில் இணைந்த இரண்டாவது படம் 'ஜிகர்தண்டா XX'

2023ம் ஆண்டின் தீபாவளி வருவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது. அதற்குள்ளாகவே அப்போது வெளியாகப் போகும் படங்களைப் பற்றிய அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அடுத்து ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடிக்கும் 'ஜிகர்தண்டா XX' படமும் தீபாவளிக்கு வெளியாகும் என நேற்று அறிவித்துள்ளார்கள்.

எப்போதுமே தீபாவளி வெளியீடு என்றால் ஒரு தனி கொண்டாட்டம் இருக்கும். அந்நாளில் தங்களது படங்களை வெளியிட பலரும் பெரிதும் விரும்புவார்கள். தீபாவளி வெளியீடாக இதுவரை இரண்டு படங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களான ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' வெளியீடு ஆகஸ்ட் 10ம், விஜய் நடிக்கும் 'லியோ' அக்டோபர் 19ம் தேதியும் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், தீபாவளிக்கு அவர்களின் போட்டி இல்லை என்பது மற்றவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதல் தான். எனவே, வேறு சில நடிகர்களின் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !