மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
841 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
841 days ago
கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டி.ஆர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் கோல்டன் குளோப் திரைப்பட விழாவிலும் மற்றும் ஆஸ்கர் விழாவிலும் கலந்துகொண்டு விருதை பெற்றது. அந்த படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இந்த நிலையில் இந்த படம் பார்த்த அனுபவம் குறித்து சமீபத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிடம் கேட்கப்பட்டபோது, இன்னும் ஆர்ஆர்ஆர் படத்தை நான் பார்க்கவில்லை, அதற்கான சரியான நேரம் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் கூட பல பிரபலங்கள் இந்த படத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து ரசித்து தங்களது கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வந்தனர். அப்படி இருக்கையில் இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா இந்த படத்தை பார்க்கவில்லை என்று சொன்னதை அவரது ரசிகர்களே ரசிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு கிண்டலும் விமர்சனமாக சோசியல் மீடியாவில் பலரும் பதில் கொடுத்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக ஆர்ஆர்ஆர் படத்திற்கு, ஆஸ்கர் விருது கிடைத்த சமயத்தில் அந்த படம் பற்றி ஒரு பேட்டியில் பிரியங்கா சோப்ரா பேசும்போது, அதை தமிழ் படம் என்று குறிப்பிட்டு பேசியது அப்போது தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதேபோல தான், தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கூட வரவேற்கப்பட்ட கன்னட படமான காந்தாராவை, அதே கன்னட திரை உலகத்தை சேர்ந்த நடிகை ராஷ்மிகா, தான் இன்னும் பார்க்கவில்லை என்று கூறி இதே போன்று ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
841 days ago
841 days ago