உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏடிகேவுடன் அவுட்டிங் சென்ற பிக்பாஸ் பிரபலங்கள்!

ஏடிகேவுடன் அவுட்டிங் சென்ற பிக்பாஸ் பிரபலங்கள்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் தற்போது நீண்ட நாள் கழித்து சந்தித்து கொண்டனர். பிக்பாஸ் வீட்டில் மல்லுக்கட்டி சண்டை போட்ட ஏடிகேவும் மகேஸ்வரியும் வெளியில் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதேபோல் ரச்சிதா, ஷிவினை தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவர் ரன்னர் பட்டம் வென்றதை ஊர்வலமாக வந்து கொண்டாடினார். ஏடிகே, ஷிவின், மகேஸ்வரி, ரச்சிதா ஆகிய நால்வரும் நல்ல புரிதல் கொண்ட நண்பர்களாக இருந்து வரும் நிலையில், தற்போது நால்வரும் ஒன்றாக சேர்ந்து ஜாலியாக டூர் சென்றுள்ளனர். அந்த புகைப்படத்தை மகேஸ்வரி தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட மற்றவர்கள் எங்கே? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !