மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
839 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
839 days ago
'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பின் ஜூனியர் என்டிஆர் தற்போது கொரட்டலா சிவாவுடன் தனது அடுத்த படத்தை தொடங்கி உள்ளார். இது அவருக்கு 30வது படம். இந்த படத்தில் ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்கிறார் சைப் அலிகான் வில்லனாக நடிக்கிறார். இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் பேனர்களின் கீழ் மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா இப்படத்தை தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 2024 ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இதுவரை 'என்டிஆர் 30' என்ற தற்காலிக பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த படத்திற்கு தற்போது 'தேவரா' என்று பெயர் சூட்டி உள்ளனர். ஜூனியர் என்டிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று படத்தின் டைட்டிலும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
839 days ago
839 days ago