தெலுங்கில் அறிமுகமாகும் நவாசுதீன் சித்திக்
ADDED : 868 days ago
பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், குணசித்ர மற்றும் வில்லன் வேடங்களுக்கு புகழ்பெற்றவர். தமிழில் 'பேட்ட' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் வில்லனாக அறிமுகமாகிறார். வெங்கடேஷ் நடிக்கும் அவரது 75வது படமான 'சைந்தவ்' படத்தில் நடிக்கிறார் நவாசுதீன். இந்த படத்தில் நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார், ருஹானி ஷர்மாவும், ஆண்ட்ரியா ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். சைலேஷ் கொலானு இயக்க, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் வெங்கட் போயனபள்ளி தயாரிக்கிறார். ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தத் படத்தில், நவாசுதீன் சித்திக் விகாஸ் மாலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அவரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படத்தில் அவரின் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர்.