உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆஸ்கர் விருது : நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்'

ஆஸ்கர் விருது : நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்'

98வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த சர்வதேச திரைப்படங்களுக்கான போட்டியில் இந்தியாவின் சார்பில் 'ஹோம்பவுண்ட்' படம் தேர்வு செய்து அனுப்பப்பட்டது. நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியான படம் இது.

கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட 15 படங்கள் தேர்வுப் பட்டியலில் 'ஹோம்பவுண்ட்' படம் இடம் பெற்றிருந்தது. ஆனால், இன்று அறிவிக்கப்பட்ட நாமினேஷனுக்கான 5 இறுதிப் படங்களின் பட்டியலில் இப்படம் தேர்வாகவில்லை.

பிரேசில் நாட்டின் 'தி சீக்ரெட் ஏஜன்ட்', பிரான்ஸ் நாட்டின் 'இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்', நார்வே நாட்டின் 'சென்டிமென்டல் வேல்யு', ஸ்பெயின் நாட்டின் 'சிராட்', துனிஷா நாட்டின் 'த வாய்ஸ் ஆப் ஹிந்த் ரஜாப்' ஆகிய படங்கள் நாமினேஷனுக்குத் தேர்வாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !