மேலும் செய்திகள்
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
841 days ago
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
841 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
841 days ago
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி தற்போது முதல் முறையாக இயக்கி, நடித்துள்ள திரைப்படம் பிச்சைக்காரன் 2. காவ்யா தபார், யோகி பாபு, ஜான் விஜய், ஹரிஷ் பெரடி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேற்று இந்த படம் உலகமெங்கும் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படம் தமிழில் வெளியானது போல் தெலுங்கிலும் பிச்சகாடு 2 என்ற பெயரில் வெளியானது. ஏற்கனவே முதல் பாகம் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களில் முதல் நாள் மட்டும் சுமார் ரூ. 4 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் 3 கோடியும் வசூலித்து மொத்தமாக 7 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான விஜய் ஆண்டனி படங்களிலே இந்த படத்தின் முதல் நாள் வசூல் தான் அதிகம் என்கிறார்கள்.
841 days ago
841 days ago
841 days ago