'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா!
ADDED : 30 minutes ago
தெலுங்கில் 'ஹரி ஹர வீரமல்லு' படத்தை அடுத்து தற்போது 'உஸ்தாத் பகத்சிங்' என்ற படத்தில் நடித்து வருகிறார் பவன் கல்யாண். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இது பவன் கல்யாணுக்கு ஜோடியாக அவர் நடிக்கும் முதல் படமாகும். இந்த உஸ்தாத் பகத்சிங் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா, அடுத்து தெலுங்கில் கடந்த ஆண்டில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'சங்கராந்திகி வஸ்துனம்' என்ற படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். அனீஸ் பாஸ்மி என்பவர் இயக்கும் இந்த படத்தில் தெலுங்கில் மீனாட்சி சவுத்ரி நடித்த வேடத்தில் நடிக்கிறார் ராஷி கண்ணா.