வரலாற்று படத்தில் டொவினோ தாமஸ்: எதிர்பார்ப்பு அதிகரிப்பு
டொவினோ தாமஸ் தற்போது நடித்து வரும் படம் 'அஜயந்தே ரண்டாம் மோஷனம்' வரலாற்று கதையாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்குகிறார். கேரளாவில் 1900, 1950 மற்றும் 1990 என வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் இப்படத்தின் கதையில் 3 கதாபாத்திரங்களில் டொவினோ தாமஸ் நடித்துள்ளார். கிர்த்தி ஷெட்டி, பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, சிவாஜித் மற்றும் அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான இதன் டீசர் கேரளாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் கேரளாவில் வாழ்ந்த பிரபல திருடனின் கதை. கோயில்களில் மட்டும் திருடுவது அவனது பாணி. இந்த படத்தின் சண்டை காட்சிகள் மட்டும் 50 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. காந்தாரா போன்று ஆன்மிகமும், சமூகமும் கலந்த படமாக உருவாகி உள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படம் மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகிறது. டொவினோ தாமஸ் நடித்த '2018' படம் தற்போது 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.