நடிகர் சரத்பாபு காலமானார்
ஐதராபாத் : உடல்நலம் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு(71) இன்று(மே 22) காலமானார்.
சில மாதங்களுக்கு முன் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், உடல் உறுப்பு நோய் அழற்சி பிரச்னை காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழந்து அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று(மே 22) சிகிச்சை பலன் இன்றி அவர் மறைந்தார்.
சரத்பாபுவின் மறைவு தென்னிந்திய திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சரத்பாபுவின் உடல் ஐதராபாத்தில் பிலிம்சேம்பரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு மேல் சென்னை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். நாளை(மே 23) சென்னையில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.