சசிகுமார் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் ரிலீஸ் செய்கிறது
ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மை லார்ட் படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ். இதில் சசிகுமார் மற்றும் சைத்ரா நடிக்க ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை வழங்குவதை பெருமையாக கருத்துவதாக 2டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம், அன்பையும், நம்பிக்கையையும் முன்வைத்து நல்ல படைப்புகளுக்கு எப்போதும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் பிரத்யேக இடம் உண்டு. சினிமா என்பது பொழுதுபோக்கு, வியாபாரம் என்பதையும் தாண்டி பார்வையாளர்கள் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கும் கலை ஆகும். அப்படியான சினிமாக்களுக்கு துணை நிற்க வேண்டியது நமது கடமை. அந்த வரிசையில், ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் மை லார்ட் திரைப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்குகிறது.
ஒரு நல்ல சொல், செயல், ஆக்கம் இன்னும் அதிகமான மக்களை சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எங்களுக்கு உண்டு. அப்படி மை லார்ட் திரைப்படம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பது தான் எங்களின் ஆவல் மற்றும் நம்பிக்கை.
2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மை லார்ட் படத்தை வழங்குவதை பெருமையாக கருதுகிறது. மை லார்ட் திரைப்படம் சமூகத்தை பிரபதிபலிக்கும் விதத்தில் இருப்பதோடு, மனித நேயம் இந்தக் காலத்தில் எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை எடுத்துரைப்பதால், இதனை வழங்குதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், என தெரிவித்துள்ளது.
இதனால் படத்துக்கு தியேட்டர்கள் அதிகரித்துள்ளது. சூர்யாவின் 2டி நிறுவனம் சமீபகாலமாக படம் தயாரிக்காமல் இருந்த நிலையில் இந்த படத்தை கையில் எடுத்துள்ளது. கார்த்தி நடித்த 'ஜப்பான்' படத்தை இயக்கியவர் ராஜூமுருகன். அப்படம் தோல்வியடைந்தது.