காதலனை கரம்பிடித்த தீபிகா
ADDED : 870 days ago
கனா காணும் காலங்கள் வெப் தொடரில் நடித்து வரும் ராஜா வெற்றி பிரபுவும், தீபிகாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். ஒரு மாதத்திற்கு முன்பு தான் தீபிகா தனது காதல் குறித்து இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இருவருக்கும் தற்போது கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். தீபிகா-ராஜா வெற்றி பிரபுவின் திருமணம் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வர, ரசிகர்கள் மணமக்களுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.