கல்லூரி காலத்தில் செம க்யூட்டான காயத்ரி கிருஷ்ணன் புகைப்படங்கள்!
ADDED : 948 days ago
'எதிர்நீச்சல்' தொடரில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் அதிக பிரபலமாகியுள்ளார் நடிகை காயத்ரி கிருஷ்ணன். முன்னதாக அயலி வெப் தொடரும் இவரது நடிப்புக்கு பாராட்டுகளை பெற்று தந்தது. காயத்ரி கிருஷ்ணன் தனக்கு 33 வயது தான் ஆகிறது என சில பேட்டிகளில் சொல்லி வருகிறார். ஆனால், அவரது தோற்றத்தை வைத்து பலரும் அவரை ஆண்டி நடிகை என கிண்டல் செய்து வந்தனர்.
இந்நிலையில், தனது கல்லூரி கால புகைப்படங்களை த்ரோ பேக்காக இன்ஸ்டாகிராமில் காயத்ரி கிருஷ்ணன் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் ஒல்லியான இளமையான தோற்றத்துடன் இருக்கும் காயத்ரி கிருஷ்ணனை பார்த்து 'நீங்க உண்மையாவே ஒரு ஹீரோயின் மெட்டீரியல்' என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.