உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இலங்கையில் சூரி சாகசம்

இலங்கையில் சூரி சாகசம்

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் இரண்டு பாகங்களிலும் கதையின் நாயகனாக நடித்திருக்கும் சூரி, அதையடுத்து கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி உள்ள கொட்டுக்காளி என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இதையடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்திலும், இன்னும் சில படங்களிலும் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார். இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூரி, அங்குள்ள சிப் லைனில் அவர் சாகச பயணம் செய்திருக்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்து உங்களின் தன்னம்பிக்கை, துணிச்சல், உழைப்பு, இவற்றைப் பொறுத்து உங்கள் மகிழ்ச்சி என்று அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !