காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்திற்கு U/A சான்றிதழ்
ADDED : 859 days ago
முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி நாளை(ஜூன் 2) ரிலீஸ்க்கு தயராகியுள்ள திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. சித்தி இத்தானி, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வருகின்ற ஜூன் 2 அன்று இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஆக்ரோஷமான சண்டை, வன்முறை காட்சிகள் இருப்பதால் U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.