உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலகிருஷ்ணாவின் அடுத்த பட தலைப்பு இதோ

பாலகிருஷ்ணாவின் அடுத்த பட தலைப்பு இதோ

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. தற்போது இவர் இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் தனது 108வது படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஷைன் ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். வருகின்ற தசராவிற்கு இந்த படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‛பகவந்த் கேசரி' டேக் லைனாக ‛ஜ டோன்ட் கேர்' என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது . வருகின்ற ஜூன் 10ம் தேதி பாலகிருஷ்ணா பிறந்தநாள் அன்று தலைப்பு உடன் முதல் பார்வை வெளியாகும் என்று கூறப்படுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !