என்னுடைய ரீ-என்ட்ரிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது : திருப்பதியில் வனிதா நெகிழ்ச்சி
நடிகை வனிதா விஜயகுமார் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இந்நிலையில், அவர் தெலுங்கில் நடித்த மல்லி பெல்லி படம் ரிலீஸாகியுள்ளது. இதனையொட்டி திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ள வனிதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதென்றும், தற்போது ரிலீஸாகியுள்ள மல்லி பெல்லி திரைப்படம் ஹிட் அடைய வேண்டிகொண்டதாகவும் கூறினார். மேலும், 'அம்மா மற்றும் கடவுளின் ஆசியோடு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுக்கும் காலத்தில் நான் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளேன். அதை பாக்கியமாக கருதுகிறேன். நல்ல கேரக்டர்கள் எனக்கு அமைகிறது' என்றார். அடுத்து திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வனிதா, 'கடவுளின் கிருபையால் மீண்டும் காதல் வந்தால் பார்க்கலாம். அதைபற்றியெல்லாம் பயமோ, தயக்கமோ எனக்கு கிடையாது' என்று கூறியுள்ளார்.