ஜூன் 5ல் சுனைனா படத்தின் ஆடியோ விழா
ADDED : 1185 days ago
காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் முதன்மை கதாபாத்திரத்தில் ரெஜினா என்ற படத்தில் நடித்து வருகிறார். நிவாஷ் அதிதன்,ரித்து மந்தரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கும் இப்படத்தை சதிஷ் நாயர் தயாரித்து இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகின்ற ஜூன் 5ம் தேதி அன்று சென்னை பி.வி.ஆர் சினிமாவில் நடைபெறுகிறது என்றும், இதன் ஆடியோ மற்றும் டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிடுவார் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.