பிக்பாஸ் தாமரை செல்வி வீட்டில் சோகம்
ADDED : 869 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது சோகக்கதை அனைவரும் அறிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் சினிமா, சீரியல் என நடிக்க ஆரம்பித்து இன்று ஓரளவு பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறார். அண்மையில் கூட சொந்த ஊரில் தனது தாய் தந்தைக்காக ரசிகர்களின் உதவியுடன் வீடு கட்டிக்கொண்டிருப்பதை மகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தாமரைச் செல்வியின் தந்தை இரண்டு தினங்களுக்கு முன் திடீரென மரணமடைந்துள்ளார். இந்த சோகத்தை தாங்காத முடியாத தாமரை செல்வி இன்ஸ்டாகிராமில் தந்தையை நினைத்து உருக்கமாக பதிவிட, அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.