ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு விரைவில் திருமணம்!
ADDED : 870 days ago
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தவர் இந்திரஜா. நடிகர் ரோபோ சங்கரின் மகளான இவர், அதன் பிறகு முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான விருமன் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் தனது முறைமாமனுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த இந்திரஜா, அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்.
அந்த போட்டோவில் அவர் வெட்கப்புன்னகையுடன் நிற்பதைப்பார்த்து, இவர்தான் இந்திரஜாவின் வருங்கால கணவரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினார்கள், அப்போது அதை உறுதிப்படுத்திய இந்திரஜா, விரைவில் எங்களுக்கு திருமணம் நடக்கப்போகிறது. ஆனால் இன்னமும் திருமண தேதி குறிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.