உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாவீரன் படத்தின் டப்பிங் பணியை முடித்த சிவகார்த்திகேயன்

மாவீரன் படத்தின் டப்பிங் பணியை முடித்த சிவகார்த்திகேயன்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது வருகின்ற ஜூலை 14 அன்று இப்படம் வெளியாகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தாக தெரிவித்தனர். கடந்த மாதம் 29ம் தேதி அன்று சிவகார்த்திகேயன் இந்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார். இந்த நிலையில் நேற்று தனக்கான மொத்த டப்பிங் பணிகளையும் முடித்துள்ளார். இதுதொடர்பான போட்டோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !