ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா
ADDED : 871 days ago
'மஸ்காரா அஸ்மிதா' என்று செல்லமாக அழைக்கப்படும் அஸ்மிதா சிறு பட்ஜெட் படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வந்தார். தற்போது அவர் 'இங்கு மிருகங்கள் வாழும் இடம்' என்ற படத்தின் கதை நாயகியாக நடிக்கிறார். இதில் பைன்ஜான் நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் ஶ்ரீதேவி உன்னி கிருஷ்ணன், சேரன் ராஜ், கோலிசோடா ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
எஸ்.சசிகுமார் திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார். பைன்ஜான் பிக்ஸர்ஸ் சார்பில் ஜே.அஜரா பேகம் தயாரிக்கிறார். வித்யா ஷரண் இசை அமைக்கிறார். சிவ பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமைகளின் பின்னணியில் படம் உருவாகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண்ணாக அஸ்மிதா நடிக்கிறார்.