ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ்
ADDED : 852 days ago
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிர்த்தி சனோன், சைப் அலிகான் நடித்துள்ள படம் ‛ஆதிபுருஷ்'. ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் 5 மொழிகளில் ஜூன் 16ல் வெளியாகிறது. 3டி, ஐமேக்ஸ் போன்ற திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இருதினங்களுக்கு முன் திருப்பதியில் இப்பட விழா பிரமாண்டமாய் நடந்தது. நடிகர் பிரபாஸ் கூறுகையில், ‛‛இதை சினிமா என்று சொல்லக்கூடாது, ராமாயணம். இதில் நடித்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். இந்தபட அறிவிப்பு வந்தபோது ராமனாக நீ நடிக்கிறாயா என சிரஞ்சீவி கேட்டார். ஆமாம் என்றேன். அதற்கு நீ அதிர்ஷ்டக்காரன் யாருக்கும் கிடைக்காது, உனக்கு கிடைத்திருக்கிறது எனக்கூறினார். அனைவரது இதயங்களிலும் ராமன் உள்ளார். அவராக நான் நடித்ததை கடவுளின் அருளாக, பாக்கியமாக நினைக்கிறேன். இனி முடிந்தவரை ஆண்டுக்கு இரண்டு, மூன்று படங்களில் நடிப்பேன்'' என்றார்.