நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி
ADDED : 892 days ago
‛செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி ஏராளமான வெற்றி படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரோஜா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிகளிலும் நடித்துள்ளார். இயக்குனர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்த பின் சில காலம் நடித்தவர் பிறகு அரசியலில் களமிறங்கினார். தற்போது ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார்.
அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வரும் ரோஜா திடீரென சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கால்வலி மற்றும் கால்வீக்கம் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்கிறார்கள்.