உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் ஜிவி பிரகாஷ் சந்திப்பு

மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் ஜிவி பிரகாஷ் சந்திப்பு

2 நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பா.ஜ., கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்ற அமித்ஷா, சினிமா, விளையாட்டு, அரசியல், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 24 பிரபலங்களை சந்தித்து இரவு விருந்து அளித்தார்.

இந்த இரவு விருந்தில் சினிமா துறையை சார்ந்த இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார், இயக்குநர், பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தயாரிப்பாளரும், திரையரங்க உரிமையாளருமான அபிராமி ராமநாதன், தயாரிப்பாளரும் வேல்ஸ் பல்கலைக்கழக உரிமையாளர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் ஏஆர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !