சரத்குமார் 150வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1116 days ago
நடிகர் சரத்குமார் 80, 90 காலகட்டங்களில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்தவர். 2000 காலகட்டத்தில் அவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் தோல்வி அடைந்த பிறகு கௌரவ தோற்றம், முக்கிய கதாபாத்திரத்தில் மட்டும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த போர் தொழில் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்துள்ளது. இந்தப்படம் தவிர்த்து சுமார் 15 படங்கள் வரை இவர் கைவசம் உள்ளன. இந்த நிலையில் தற்போது சரத்குமாரின் 150வது படமான தி ஸ்மைல் மேன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர்கள் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இந்த படத்தை மெமரிஸ் பட இயக்குனர்கள் ஷாம் மற்றும் பிரவின் இயக்கியுள்ளார்கள். இனியா, சிஜா ரோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது.