உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பான் இந்திய படத்தில் கீர்த்தி சுரேஷ்

பான் இந்திய படத்தில் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை கதாபாத்திரத்தை கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு புதிய பான் இந்திய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரோடு இணைந்து ரைட்டர் பத்ம பூஷன் படத்தில் நடித்த இளம் நடிகர் சுகாஷ் நடிக்கிறாராம். இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலமாக பான் இந்தியா திரைப்படமாக தயாரிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் குறித்தும் மற்ற அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !