மகேஷ் பாபு படத்தை விட்டு வெளியேறினார்களா தமன், பூஜா ஹெக்டே?
ADDED : 1104 days ago
இயக்குனர் த்ரி விக்ரம் இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குண்டூர் காரம். பூஜா ஹெக்டே, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹாரிகா & ஹசைன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 2024 பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வருகிறது என்று அறிவித்தனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து தமன் விலகுகிறார் அவருக்கு பதிலாக இப்படத்தில் இசையமைக்க அனிருத் உடன் இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே கால்ஷீட் பிரச்னையால் விலகியதாக நேற்றில் இருந்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிபடுத்தவில்லை.