உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வயதான பெண்களை கூட தப்பா பாக்குறாங்க : சீரிய வாணி போஜன்

வயதான பெண்களை கூட தப்பா பாக்குறாங்க : சீரிய வாணி போஜன்

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ள வாணி போஜன் இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். அண்மையில் 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் புரொமோஷனுக்காக சென்றிருந்த அவர், பெண்களை தவறாக பார்ப்பவர்கள் குறித்து கோபமாக பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அவர் கூறுகையில், 'நான் பல சிக்னல்களில் பார்த்திருக்கிறேன். பெண்கள் பைக்கில் செல்லும் போது சேலை கட்டி சென்றால் அவர்கள் மேல் தான் அனைவரது கண்ணும் இருக்கும். அது ஏன் என்று தெரியவில்லை. சேலை கட்டினாலே இப்படி தான் பார்க்க வேண்டுமா?. வயதான பெண்களை கூட வேறு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள். அந்த மாதிரியான ஆட்கள் ஒருபோதும் திருந்தமாட்டார்கள்' என கோபமாக கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !