மீண்டும் வெற்றி பட இயக்குனரோடு கைகொர்க்கும் ரவி தேஜா
ADDED : 835 days ago
கடந்த 2022ம் ஆண்டில் இயக்குனர் த்ரிநாதா ராவ் நகினா இயக்கத்தில் ரவி தேஜா, ஸ்ரீலீலா, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் தமாகா. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி படமாகியது. இந்த நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் ரவி தேஜா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் இந்த படத்தை தமாகா இயக்குனர் த்ரிநாதா ராவ் நகினா இயக்குகிறார் என்று கூறப்படுகிறது.