நெட்டிசனுக்கு ஹன்சிகா கொடுத்த பதிலடி
ADDED : 835 days ago
திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. அதோடு முன்பு வெயிட் போட்டு இருந்தவர் தற்போது பெரிய அளவில் ஸ்லிம் ஆகிவிட்டார். இந்த நிலையில் தொடர்ந்து யோகா செய்து வருவதினால் தான் தனது உடல் எடை குறைந்தாக அவர் ஒரு பதிவு போட்டிருந்தார். ஆனால் அதற்கு நெட்டிசன் ஒருவர், அறுவை சிகிச்சை செய்து உடம்பை குறைத்து விட்டு, யோகாவால் குறைத்ததாக பொய் சொல்வதா? என்று ஒரு எதிர் கருத்து பதிவிட்டார். இதையடுத்து அந்த நெட்டிசனுக்கு ஹன்சிகா ஒரு பதிலடி கொடுத்துள்ளார். அதில், எனது உடல் எடையை குறைப்பதற்கு கடுமையாக உழைத்திருக்கிறேன். அதில் யோகாவும் ஒன்று. அதோடு வெறுப்புகளுக்கு எதிர்மறையான விஷயங்களை பரப்புவதற்கு யோகா உதவுகிறது என்று சொல்லி அந்த ரசிகருக்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார்.