146 அடி உயர முருகனை தரிசித்த யோகிபாபு
ADDED : 842 days ago
சேலம் அருகே ஏத்தாப்பூரில் உள்ள, 146 அடி உயர முருகன் சுவாமியை, நடிகர் யோகிபாபு தரிசித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூரில் முத்துமலை முருகன் கோவில் உள்ளது. அங்கு யோகிபாபு, அவரது குடும்பத்தினருடன் வந்தார். அவர், மனைவி மஞ்சுபார்கவி, 2 வயது மகன் விசாகன், 7 மாத பெண் குழந்தை பரணிகார்த்திகா ஆகியோர், மூலவர் முருகன் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து கோவிலை சுற்றி வலம் வந்து தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, 146 அடி உயர முருகன் சிலை அருகே உள்ள வேல் சிலைக்கு, நடிகர் யோகிபாபு குடும்பத்தினருடன், பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டார். கோவிலுக்கு வந்த பக்தர்களுடன், யோகிபாபு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.