நவ., 24ல் எமர்ஜென்சி ரிலீஸ்
ADDED : 877 days ago
நடிகை கங்கனா ரணாவத் ஹிந்தியில் இயக்கி, நடித்துள்ள படம் ‛எமர்ஜென்சி'. முன்னாள் பிரதமர் இந்திரா காலக்கட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட எமர்ஜென்சி உத்தரவை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இதில் இந்திரா வேடத்தில் கங்கனா நடித்துள்ளார். அனுபம் கேர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு வீடியோ உடன் அறிவித்துள்ளார் கங்கனா. அதோடு, “மக்களை காப்பவரா அல்லது சர்வாதிகாரியா? நமது தேசத்தின் தலைவர் மக்கள் மீது போர் தொடுத்த இந்திய வரலாற்றின் இருண்ட பக்கங்களை பார்வையிடுங்கள்” என குறிப்பிட்டு நவ., 24ல் படம் ரிலீஸாகிறது என தெரிவித்துள்ளார்.