சாதி பெயர் கொண்ட படம், பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும் - இயக்குனர் சீனு ராமசாமி
ADDED : 850 days ago
நீர் பறவை, தர்ம துரை போன்ற எதார்த்தமான திரைப்படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. அவர் ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்கிய இடி முழக்கம் படம் விரைவில் வெளியாகிறது.
இந்த நிலையில் சீனு ராமசாமி முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள், சினிமா, தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது இடங்களில் ஒலிப்பெருக்கிகளில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை மற்றும் தடை விதித்தல் செய்திட வேண்டும் என கோரியுள்ளார்.