லால் சலாம் படத்தில் இணைந்த 80ஸ் நடிகை!
ADDED : 885 days ago
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகின்றது.
சமீபத்தில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கி வந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நிரோஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக இவர் சசிகுமார் நடித்த ராஜ வம்சம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.