உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செப்டம்பர் 15ல் திரைக்கு வரும் சந்திரமுகி 2

செப்டம்பர் 15ல் திரைக்கு வரும் சந்திரமுகி 2

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சந்திரமுகி 2. எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இறுதிக் கட்டப்பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தை வருகிற செப்டம்பர் 15ம் தேதி வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் சந்திரமுகி-2 படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !