புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ஹிர்த்திக் ரோஷன்!
ADDED : 842 days ago
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் ஒருவர் ஹிருத்திக் ரோஷன். தற்போது வார் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் உடன் மீண்டும் இணைந்து பைட்டர் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் . இதில் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க முக்கிய வேடத்தில் அனில் கபூர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். வியாகாம் 18 தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் மற்றும் சேகர் இசையமைக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை குறித்து ஹிருத்திக் ரோஷன் தனது புதிய போட்டோ உடன் தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்தாண்டு ஐனவரி 25ம் தேதி அன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.