மேலும் செய்திகள்
பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா
798 days ago
'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம்
798 days ago
அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு
798 days ago
பிரபல சின்னத்திரை நடிகை ஆயிஷா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் யோகேஷ் என்பவரை காதலித்து வந்ததை வெளிப்படையாக அறிவித்தார். இதனைதொடர்ந்து இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலான நிலையில், ஆயிஷா - யோகேஷ் திருமணம் விரைவிலேயே நடைபெறும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வந்தனர். ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில் யோகேஷுடன் எடுத்துக்கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களையும், டேட்டிங் செய்யும் போது பதிவிட்ட புகைப்படங்களையும் ஆயிஷா தனது இன்ஸ்டாவிலிருந்து திடீரென நீக்கியுள்ளார். மேலும், சமீப காலங்களாக ஆயிஷா தனது போட்டோஷூட் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார். சீரியல் நடிகைகளின் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை தொடர்ந்து பிரிவையும் துயரத்தையும் சந்தித்து வரும் நிலையில் ஆயிஷாவின் இந்த செயலால் யோகேஷுக்கும் ஆயிஷாவுக்கும் ப்ரேக்கப் ஆகிவிட்டதா? என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஆனால் இதுபற்றி ஆயிஷா எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
798 days ago
798 days ago
798 days ago