உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதிய சூப்பர்மேன் தேர்வு : டிசி நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு

புதிய சூப்பர்மேன் தேர்வு : டிசி நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களின் துவக்கமே சூப்பர் மேன் படத்தில் இருந்துதான் தொடங்கியது. அதன்பிறகே ஸ்பைடர் மேன், பேட் மேன், அயர்ன் மேன் என வரிசையாக வந்தார்கள். சூப்பர் மேனாக இதுவரை கிர்க் அலைன், கிஜீஸ்டோபர் ரீவ்ஸ், பிராண்டன், ஹென்றி கெவில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் 2013 முதல் 2017 வரை சூப்பர்மேனாக நடித்த ஹென்றி கெவில்தான் பொருத்தமான நடிகராக போற்றப்பட்டார்.

டிசி நிறுவனம் அடுத்ததாக 'சூப்பர்மேன் : லெகசி' என்ற படத்தை தயாரிக்கிறது. இதனை ஜேம்ஸ் கன் இயக்குகிறார். இவர் 'கார்டியன் ஆப் கேலக்சி' படத்தை இயக்கியவர். இவர் தற்போது டிசி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார். இந்த நிலையில் புதிய சூப்பர் மேனாக டேவிட் கான்ஸ்வெட் என்ற இளைஞர் தேர்வாகி இருக்கிறார். இவரது தோற்றம் முந்தைய சூப்பர் மேன் ஹென்னி கெலன் போன்று இருப்பதால் இவர் தேர்வாகி உள்ளார். தற்போது படத்தில் நடிப்பதற்காக பயிற்சிகளை பெற்று வருகிறார். இவரது ஜோடியாக நடிக்க ரேச்சல் ப்ராஸ்னன் தேர்வாகி உள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !