ப்ரேக்-அப் ஆனதை டான்ஸ் ஆடி கொண்டாடிய சாய் ப்ரியங்கா ரூத்!
ADDED : 828 days ago
தமிழ் சின்னத்திரையில் பூவே பூச்சூடவா, கல்யாணமாம் கல்யாணம், கேளடி கண்மணி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் ப்ரியங்கா ரூத். பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல பெயரும் புகழும் கிடைத்துள்ளது. இந்நிலையில், அவர் தற்போது தனக்கு ப்ரேக்-அப் ஆன விஷயத்தை டான்ஸ் ஆடி கொண்டாடி இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவானது படுபயங்கரமாக வைரலாகி வர, பலரும் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பை விட்டொழிப்பதே சரியான முடிவு என சாய் ப்ரியங்காவின் முடிவுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். முன்னதாக நடிகை ஷாலினியும் தனக்கு விவாகரத்து கிடைத்த விஷயத்தை சந்தோஷமாக போட்டோஷூட் வெளியிட்டு கொண்டாடிய நிலையில், சாய் ப்ரியங்காவும் அதே ஸ்டைலில் தனது விடுதலையை கொண்டாடியுள்ளார்.